Posts

Showing posts from December, 2025

மணிமேகலை காப்பியமும் மகாவம்சமும்

Image
மணிமேகலை காப்பியமும் மகாவம்சமும் - பெருஞ்சித்திரனார்  இரண்டு நூல்களிலும் நாகர் பற்றிய குறிப்புக்கள் மற்றும் குலத் தோற்றம் குறித்த கதைகளில் சில ஒற்றுமைகள் உள்ளது மணிமேகலை காப்பியத்தில் நாக நாடு நானூறு யோசனை தூரத்தில் உள்ளது என்ற குறிப்பு உள்ளது மகாவம்சத்தில் நாக நாடு கடலில் ஐநூறு யோசனைக்குப் பரந்து இருந்தது என்ற குறிப்பு உள்ளது மகாவம்சத்தில் உள்ள கதைப்படி வங்க அரசனுக்கும், கலிங்க நாட்டைச் சேர்ந்த அரசிக்கும் பிறந்த பெண் குழந்தை விலங்கு அரசனுடன்(சிங்கம்) கூடுவாள் என்ற ஆருடம் கூறினார்கள்.அதன்படி லால நாட்டில் உள்ள சிங்கத்துடன் கூடி இரண்டு குழந்தைகளை அந்தப் பெண் பெற்றாள் என்ற கதை உள்ளது. அந்த இரண்டு குழந்தைகளில் ஆண் குழந்தையின் பெயர் சிம்ம பஹீ மற்றும் குழந்தையின் பெயர் சிம்ம சீவலி. சிம்ம பஹீக்கும் சிம்ம சீவலிக்கும் பிறந்த 32 ஆட்களில் முதல் மகன் தான் விஜயன்.மகாவம்சம் விஜயனின் பிறப்பை மனிதன் மற்றும் விலங்குடன் தொடர்புபடுத்தும் கதைத் தொன்மம் உள்ளது மகாவம்சம் கதையில் இருப்பது போல மணிமேகலை காப்பியத்திலும் மனிதர்கள் தங்களின் பிறப்பு...