மணிமேகலை காப்பியமும் மகாவம்சமும்
மணிமேகலை காப்பியமும் மகாவம்சமும் - பெருஞ்சித்திரனார்
ஆபுத்திரன் இளம்பூதிக்கு மறுப்பு சொல்லும் வகையில் அவன் கற்ற மறையில்(வேதங்கள்) இருந்து பசுவின் மகன்(ஆன்) மகன் அசலன்,மானின் மகன் சிருங்கி, புலியின் மகன் விரிஞ்சி மற்றும் நரியின் மகன் அல்லனோ கேசகம்பளன் என்று சொல்லி இவர்கள் எல்லாம் உங்களுடைய குலங்களில் வருவார்கள் என்கிறான்
மகாவம்ச கதைப்படி விஜயனுக்கும் பாண்டிய இளவரசிக்கும் நேரடியான இளவரசன் இல்லாத காரணத்தால் இலங்கையில் விஜயன் இறந்த பின்னாடி ஒரு வருடம் யாருக்கும் முடி சூட்டவில்லை. அதன் பிறகு விஜயனின் நேரடியான இரத்த உறவுகள் வந்து முடி சூட்டினார்கள்
அனுலா விரும்பிய ஆண்களில் ஒருவன் தான் வடுகன். இன்று வந்தேறி அரசியல் பேசுறவங்க வடுகன் என்றால் தெலுங்கன் என்று சொல்லுறாங்க. ஆனால் இந்த நூலில் வடுகன் என்ற தமிழன் என்று உள்ளது 😂
மகாவம்ச நூலில் சோழ நாட்டில் இருந்து இலங்கையின் மீது படையெடுத்து அங்கு ஆட்சி செய்த ஏலாராவைப் பற்றிப் பேசுகிறது.அவனுடன் தொடர்புடைய பல கதைகளில் மனுநீதிச் சோழனின் கதையும் உள்ளது
மகாவம்ச நூலில் இருப்பது போல மணிமேகலை காப்பியத்தில் மனுநீதிச் சோழனைக் குறிக்கும் மறைமுகக் கதை உள்ளது. தன்னுடைய மகன் என்று அறிந்தும் தீர்ப்பு(முறை) வழங்கிய மன்னர் குலத்தில் துயர் வினையாளன் பிறந்தான் என்ற குறிப்பு உள்ளது
இரண்டு நூல்களிலும் நாகர் பற்றிய குறிப்புக்கள் மற்றும் குலத் தோற்றம் குறித்த கதைகளில் சில ஒற்றுமைகள் உள்ளது
மணிமேகலை காப்பியத்தில் நாக நாடு நானூறு யோசனை தூரத்தில் உள்ளது என்ற குறிப்பு உள்ளது
மகாவம்சத்தில் நாக நாடு கடலில் ஐநூறு யோசனைக்குப் பரந்து இருந்தது என்ற குறிப்பு உள்ளது
மகாவம்சத்தில் உள்ள கதைப்படி வங்க அரசனுக்கும், கலிங்க நாட்டைச் சேர்ந்த அரசிக்கும் பிறந்த பெண் குழந்தை விலங்கு அரசனுடன்(சிங்கம்) கூடுவாள் என்ற ஆருடம் கூறினார்கள்.அதன்படி லால நாட்டில் உள்ள சிங்கத்துடன் கூடி இரண்டு குழந்தைகளை அந்தப் பெண் பெற்றாள் என்ற கதை உள்ளது.
அந்த இரண்டு குழந்தைகளில் ஆண் குழந்தையின் பெயர் சிம்ம பஹீ மற்றும் குழந்தையின் பெயர் சிம்ம சீவலி. சிம்ம பஹீக்கும் சிம்ம சீவலிக்கும் பிறந்த 32 ஆட்களில் முதல் மகன் தான் விஜயன்.மகாவம்சம் விஜயனின் பிறப்பை மனிதன் மற்றும் விலங்குடன் தொடர்புபடுத்தும் கதைத் தொன்மம் உள்ளது
மகாவம்சம் கதையில் இருப்பது போல மணிமேகலை காப்பியத்திலும் மனிதர்கள் தங்களின் பிறப்புடன் தொடர்புபடுத்தும் தொன்ம மூதாதையர்களை விலங்குகள் என்று கூறும் குறிப்பு உள்ளது. பார்ப்பனப் பெண் சாலி திருமணத்திற்குப் பிறகு வேறு ஆணுடன் உறவில் பிறந்த குழந்தை ஆபுத்திரன்
சாலி தனது குற்றம் நீங்க தென் திசைக் குமரியில் நீராட வந்த சமயத்தில் ஆண் குழந்தையை ஈன்று சென்றுவிட்டாள். அங்கு வந்த இளம்பூதி என்ற குழந்தை இல்லாத அந்தணன் அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்து வேதங்களைக் கற்றுக்கொடுத்தார்
ஆபுத்திரன் அவன் தெருவில் பசுவைப் பலி கொடுத்து அந்தணர்கள் நடத்த இருந்த வேள்வியைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்த போது அவனுடைய வளர்ப்பு அப்பா இளம்பூதி அவன் திருமணம் கடந்த உறவில் பிறந்தவன் என்று இழிவு செய்ய புலைச் சிறு மகன் என்று சொல்லிய குறிப்பு உள்ளது
ஆபுத்திரன் இளம்பூதிக்கு மறுப்பு சொல்லும் வகையில் அவன் கற்ற மறையில்(வேதங்கள்) இருந்து பசுவின் மகன்(ஆன்) மகன் அசலன்,மானின் மகன் சிருங்கி, புலியின் மகன் விரிஞ்சி மற்றும் நரியின் மகன் அல்லனோ கேசகம்பளன் என்று சொல்லி இவர்கள் எல்லாம் உங்களுடைய குலங்களில் வருவார்கள் என்கிறான்
ஆபுத்திரன் பசுவின்(ஆவொடு) குலத்தில் வந்த அழி குலம் எதுவும் உள்ளதா? என்று நான்மறை கற்றவர்கள் நூலில் இருந்து சொல்ல முடியுமா என்று வினா எழுப்பினான். மகாவம்சம் கதையில் இருப்பது போல நான்கு மறைகளில் மனிதரின் பிறப்பு விலங்கு மூதாதையர்களுடன் தொடர்புபடுத்தும் போக்கு உள்ளது
மகாவம்சம் கதையில் வரும் விஜயனின் கதையும் மணிமேகலை காப்பியத்தில் நான்கு மறைகளில் மனிதர்களின்(குலங்கள்) தோற்றம் குறித்த குறிப்பு விலங்குகளுடன் தொடர்புடையதாக உள்ளது
மகாவம்சம் கதையில் விஜயன் செய்த குற்றத்திற்குக் கப்பலில் நாடு கடத்திய போது ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பிரித்து கப்பல்களில் அனுப்பிய சமயத்தில் குழந்தைகள் இறங்கிய தீவின் பெயர் நக்கதீபகம்
மணிமேகலை காப்பியத்தில் சாதுவன் செல்லும் போது கப்பல் உடைந்த போது ஆடையற்ற(நக்க) நாகர்கள் வாழும் மலையின் பக்கம் அவன் சேர்ந்தான் என்ற கதை உள்ளது. மகாவம்சம் கதையிலும் நக்க(ஆடையற்ற) பெயருடைய தீவின் பெயர் உள்ளது
மணிமேகலை முற்பிறவி குறித்து அறியும் கதையில் அவள் இருந்த இடம் நாவல் மரங்கள் ஓங்கி வளர்ந்து இருக்கும் தீவு என்ற குறிப்பு உள்ளது.மகாவம்சம் கதையிலும் அரசர்கள் அரண்மனைப் பெண்களுடன் நாவல் பழம் அருந்தச் செல்லும் பாசீனத் தீவு பற்றிய குறிப்பு உள்ளது
மணிமேகலை காப்பியத்தில் காந்த மன்னவன் அரச குலத்தை வேரோடு அழிக்க வந்த பரசுராமர் என்னை அழித்தால் இந்த நகரை யார் காப்பாற்றுவர்? என்ற கேள்விக்கு அந்த நகரைக் காக்கும் பெண் காவல் தெய்வம் அரசு உரிமை உன்னிடத்தில் இல்லை என்றால் பரசுராமன் உன்னை வந்து அணுக்கமாட்டான் என்றது
பரசுராமன் காந்த மன்னவனை அழிக்காமல் இருக்க ககந்தனை அரசனாக மாற்ற வேண்டும் என்று அமர முனிவன் அகத்தியன் உன் துயர் நீங்க சொன்ன வாக்கு என்று பெண் காவல் தெய்வம் காந்த மன்னவனிடம் கூறியது.இந்தக் கதையில் நேரடியாகச் சொல்லப்படாத மறைமுகமான பொருளும் உண்டு
அரச குலத்தைச் சேர்ந்தவன் அரியணையில் இல்லை என்றால் அவனைப் பரசுராமன் கொல்ல மாட்டான் என்ற மாற்று வழியை அகத்தியன் கூறுவது தமிழகப் பகுதியில் பரசுராமனால் ஏற்படும் அரச குல அழிவைத் தடுக்க அகத்தியன் சொல்லும் மாற்று வழி என்ற தொனியில் கதை இருக்கும்
கேரளப் பகுதியில் பரசுராமன் அரச குலத்தை அழிக்க வந்து தனது கோடரி மூலம் கேரளத்தை மீட்டார் என்ற கதை மூலம் கேரளத்தைக் காப்பாற்றிவர் என்று கதை வழியாக மக்களிடம் பரவியது. மணிமேகலை காப்பியத்தில் அரச குலத்தைக் காப்பற்ற அறிவுரை சொன்ன அகத்தியர் என்று இங்குப் பரவியது
கதைப்படி ககந்தன் என்பவன் காந்த மன்னவனின் நேரடியான அரச குல வாரிசாக இருந்தால் அவனை அரசனாக மாற்ற ஒப்புக்கொண்டிருக்க மாட்டன். மகாவம்சத்திலும் இதே மாதிரி அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தால் மட்டுமே முடிசூட்டும் முறை இருந்துள்ளது
மகாவம்ச கதையில் விஜயன் குவேணியுடன் புணர்ந்து குழந்தைகள் பிறந்து இருந்தாலும் அவனுக்கு முடி சூட்டும் விழா பாண்டிய இளவரசியை மணந்ததால் நடந்தது.அரசன் மற்றும் அரசி இருவரும் அரச குலத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் என்பதை மகாவம்ச கதையும் உணர்த்துகிறது
விஜயனின் நேரடியான இரத்த உறவில் வரும் இளவரசன் பாண்டு வசுதேவன் இலங்கையில் வந்து ஆட்சிப் பொறுப்பு பெற்றான். அரச குலப் பெண்ணைத் திருமணம் செய்யாத காரணத்தால் அவனுக்கு முடி சூட்டவில்லை
சாக்கிய நாட்டை ஆட்சி செய்த சாக்கிய பாண்டு என்பவனின் மகளான பத்ரகாஞ்சனாவை விஜயனின் நேரடியான இரத்த உறவில் வரும் இளவரசன் பாண்டு வசுதேவன் திருமணம் செய்த பின்னாடி அவனுக்கு முடி சூட்டப்பட்டது
மணிமேகலை காப்பியம் மற்றும் மகாவம்சத்தில் உள்ள கதைகளில் நேரடியான அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் முடி சூட்டி அரசாளும் தகுதியைப் பெற்று இருந்ததை உணர்த்துகிறது
மகாவம்ச நூலில் தேரர் நடத்திய வியப்பான செயல்களில் ஒன்றாக நீரின் மீது நடந்ததும் உள்ளது. மணிமேகலை காப்பியத்தில் இதே மாதிரியான செயல்கள் இடம்பெற்றுள்ளது
மணிமேகலை காப்பியத்தில் நீரின் மீது நடக்கும்(சலத்தில் திரியும்) ஒரு சாரணன் தோன்றினான் என்ற குறிப்பு உள்ளது .மகாவம்ச நூலும் மணிமேகலை காப்பியமும் நீரில் நடக்கும் மனிதர்கள் குறித்த புனைவை ஏற்றுக்கொண்டுள்ளது
மணிமேகலை காப்பியத்தில் உதயகுமரன் போன்ற இளவரசர் மணிமேகலை போன்ற கொண்டி மகளிர் குலத்தில் பிறந்தவளைக் கட்டாயபடுத்தி அடையும் சூழல் இருந்ததை விவரிக்கிறது. இது இங்கு நிலைபெற்ற மக்கள் தாய முறை காரணமாக இருக்கலாம்
மகாவம்ச நூலில் அனுலா என்ற அரசி தான் விரும்பிய தான் விரும்பிய ஆண்களை எல்லாம் அரியணை ஏற அதற்கு எதிராக எதிராக இருந்த ஆண்களை எல்லாம் நஞ்சு கொடுத்த கதை உள்ளது. அரசன் இறந்த பின்பு அரசி உடன்கட்டை ஏறும் எந்தக் குறிப்பும் மகாவம்ச மொழிபெயர்ப்பு நூலில் இல்லை
மணிமேகலை காப்பியத்தில் நாக நாட்டில் ஒரே வழியில் அல்லது நெருங்கிய உறவுமுறை உள்ள இருவரிடையே யாருக்கு அரியணை என்ற சண்டையில் புத்தர் தீர்த்து வைத்தார் என்ற கதை உள்ளது. அந்த இருவரின் பெயர்களும் நேரடியாக மணிமேகலை காப்பியத்தில் இல்லை
மகாவம்ச நூலில் நாக நாட்டில் மகோதரன் மற்றும் குலாதரன் ஆகிய இருவருக்கு இடையே நடந்த அரியணை சண்டையைப் புத்தர் தீர்த்து வைத்தார் என்ற கதை உள்ளது. மணிமேகலை காப்பியத்தில் நேரிடையாகச் சொல்லப்படாத இருவரின்(நாகர்கள்) பெயர்களும் மகாவம்ச நூலில் உள்ளது
மகாவம்ச நூலில் துவார மண்டலம் பற்றிய குறிப்பு உள்ளது. துவார மண்டலம் இடம் குறித்து வரும் கதையில் ஆண் குழந்தை பிறந்தால் கொல்ல வேண்டும் என்ற குறிப்பும் உள்ளது
இருங்கோவேள் குறித்து வரும் புறநானூறு 201-வது பாடலில் வரும் துவரை என்ற பெயருக்கும் மகாவம்ச நூலில் துவார மண்டலத்திற்கும் பெயரில் குறைந்த அளவு ஒற்றுமை உள்ளது
மகாவம்ச நூலில் உள்ள கதைப்படி விஜயன் இலங்கையில் தரை இறங்கிய சமயத்தில் அங்கு மனிதர்கள் யாரும் கிடையாது. மேலும் இயக்கர் குலத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி பெண் நாய் உருவில் இருந்தாள் என்ற கதையும் உள்ளது
மகாவம்ச நூலில் இருப்பது போல திருமுருகாற்றுப்படை நூலில் முருகன் அழித்த அசுரன்(அவுணர்) இரண்டு பெரிய உருவங்களை உடைய ஒரே ஒரு பெரிய உடம்பு உடையவர் என்ற குறிப்பு உள்ளது. ஒரு உடலில் இரண்டு உருவங்களை உடைய அசுரன்
உ.வே.சா தொகுத்த உரை நூலில் முருகன் அழித்த அசுரன் என்பவன் குதிரையும் அசுரனும் சேர்ந்து இரண்டு வடிவங்களில் சூரனின் உருவத் தோற்றம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது
இலங்கையில் களப்பணி மூலம் எழுதப்பட்ட இந்த நூலில்(இலங்கையில் வேடர்: வாழ்வியலும் மாற்றங்களும்) மகாவம்ச நூலில் குறிப்பிடப்படும் இயக்கர் குலம் வேடர்களுக்கு உரியது என்ற குறிப்பு உள்ளது
பழந்தமிழ் இலக்கியங்களில் முருகன் அழித்த இரண்டு உருவங்கள் ஒரு உடல் உடைய அசுரர்கள் என்ற கதையுடன் தொடர்புடைய மக்களாக இலங்கையில் உள்ள வேடர்கள் உள்ளனர். மகாவம்ச கதையும் முருகனின் கதையும் இலங்கை வேடர்களை மனித உருவமற்றவர்களாகச் சித்தரித்துள்ளது
மணிமேகலை காப்பியத்தில் சமணம் சமயம் பற்றிய குறிப்பு இருப்பது போல மகாவம்ச நூலிலும் சமணம் சமயம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளது
மகாவம்ச நூலில் இருப்பது போல மணிமேகலை காப்பியத்திலும் சமணர்கள்(சமணீர்காள்) தங்குமிடம் இருந்தது பற்றிய நேரடியான குறிப்பு இடம்பெற்றுள்ளது
சூளவம்ச நூலில் இலங்கையில் மௌரிய(மோரியர்) மரபைச் சேர்ந்தவர் ஆட்சி செய்தது பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. சூளவம்ச நூலில் நூலில் இருப்பது போல சங்க இலக்கியங்களில் மோரியர்(மௌரியர்) பற்றிய குறிப்புகள் உள்ளது
அகநானூறு 281-வது பாடலில் மோரியர்கள் தெற்கு நோக்கி வந்த குறிப்பு உள்ளது. சூளவம்ச நூல் மௌரியர்கள் இலங்கையில் ஆட்சியைப் பிடித்தது பற்றி விவரிக்கிறது
மகாவம்ச நூலில் சோழ நாட்டில் இருந்து இலங்கையின் மீது படையெடுத்து அங்கு ஆட்சி செய்த ஏலாராவைப் பற்றிப் பேசுகிறது.அவனுடன் தொடர்புடைய பல கதைகளில் மனுநீதிச் சோழனின் கதையும் உள்ளது
மகாவம்ச நூலில் இருப்பது போல மணிமேகலை காப்பியத்தில் மனுநீதிச் சோழனைக் குறிக்கும் மறைமுகக் கதை உள்ளது. தன்னுடைய மகன் என்று அறிந்தும் தீர்ப்பு(முறை) வழங்கிய மன்னர் குலத்தில் துயர் வினையாளன் பிறந்தான் என்ற குறிப்பு உள்ளது
மனுநீதிச் சோழன் குறித்த கதை இடம்பெற்றுள்ள பெரிய புராணம் மற்றும் பழமொழி நானூறு இரண்டு நூல்களிலும் பசுவினை ஏற்றிக்கொண்ட தன்னுடைய மகனுக்குத் தந்தை தண்டனை நிறைவேற்றிய காலம் மட்டும் மாறுபட்டு காணப்படுகிறது
பெரிய புராணத்தில் பசுவின் கன்றைத் தேரில் ஏற்றிக் கொலை செய்தது தன்னுடைய மகன் தான் என்ற உண்மையை மனு தன்னுடைய அமைச்சரிடம் கேட்டு அறிந்து யாருடைய அறிவுரையும் ஏற்காமல் உடனே தன்னுடைய மகனைத் தேரில் ஏற்றிக் கொன்றதாக கதை உள்ளது
மகாவம்ச நூலில் உள்ள மனுநீதிச் சோழனைக் குறிப்பது மாதிரியான கதையும் தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் கோவில் கல்வெட்டிலும் காணப்படுகிறது
References
1.South Indian Inscriptions - Volume 5 (page number-174)
2.பெரிய புராணம்(திருத்தொண்டர் புராணம்)
தமிழகப் பகுதியில் வழங்கும் கதையில் பசுவின் கன்றை தேர் ஏற்றிக் கொன்ற தனது மகன் மீது ஏற்றிக் கொன்றவன் மனுநீதிச் சோழன் என்றே அறியப்படுகிறது. ஆனால் இலங்கையில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் அந்தக் கதையுடன் தொடர்புடையவனாக ஏலாராவின் பெயர் உள்ளது
சூளவம்ச நூலில் விஜயன் கலிங்க மரபில் வந்தவன் என்ற குறிப்பு உள்ளது. சந்திர குலத்தைச் சேர்ந்த ஆண் சூரிய குலப் பெண்ணைத் திருமணம் செய்தால் அவன் சூரிய குலமாக மாற முடியாது என்றுள்ளது.
தமிழ் அரசர்களைப் போல சிங்கள அரசர்களிடமும் சூரிய மற்றும் சந்திர குலம் இருந்துள்ளது