Posts

Showing posts from March, 2023

பல்லவர் (எ) பல் ஒளியர்

Image
இப்படிக்கு, புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை பல்லவர் (எ) பல் ஒளியர் :  பல்லவர் = பல் + அவர் அவா / அவர் = சமஸ்கிருத விகுதிச்சொல்  இங்கு, "பல்" என்பதும் தமிழ்ச் சொல் போல தெரியவில்லை  "பல்" என்பது "பலம் பொருந்தியவர்" என்ற சமஸ்கிருதச் சொல்லாகவே இருக்க வேண்டும்  எனவே,  "பல்லவா / பல்லவர்" என்பவர்  *"பலம் வாய்ந்த ஒளியர்* (அ) ஒளியரில் பலம் வாய்ந்தவர்" என்பன போன்ற அர்த்தம் கொண்ட வார்த்தையாக இருக்க வேண்டும்  *சிம்ம விஷ்ணு* என்கிற பல்லவ மன்னன் பற்றிய செப்பேடுகளில் (பல்லவர் செப்பேடுகள் 30) *"ஒளிக்குலத்தை அவன் பிறப்பினால் அலங்கரித்தவன்"* என்று கூறப்பட்டுள்ளது *பட்டினப்பாலை* நூலில் முதலாம் கரிகால *சோழன் பல் ஒளியரை வீழ்த்தியது* பற்றி கூறப்பட்டுள்ளது இதற்கு தெளிவுரை எழுதிய பலரும் *பல ஒளியர்களை வீழ்த்தினான்* என்று எழுதி வருகின்றனர் 14ம் நூற்றாண்டில் *கலித்தொகைக்கு* உரை எழுதிய *நச்சினார்க்கினயர்* *ஒளியர் = மற்றை மண்டலங்களை அரசாளுதற்குரிய வேளாளர்* என்று எழுதியுள்ளார் *கம்பர்* எழுதிய திருக்கை வழக்கத

எழுத்தாய் பிறந்து வாழ ஆசை - புலவர் பா.கார்த்திக் ராஜா

எழுத்தாய் பிறந்து வாழ ஆசை   -  புலவர் பா.கார்த்திக் ராஜா நிம்மதியில்லாதது, நிரந்தரமில்லாதது, ஓடும் வேகத்தில் பார்வையை கவர்வது, திரும்பிப் பார்த்தால் கண்ணில் சிறு ஓட்டம் ஓடுவதும், முன்னே பார்க்க பல ஓட்டங்கள் தூண்டுவதும், வாழ்க்கை மட்டுமல்ல இவ்வெழுத்துக்களும் தான் எழுத்துக்கள் வாழ்க்கையைப் போன்றவை, எழுத்துக்கள் உலகில் மற்ற உயர்கள் போல தோன்றி மறைபவை, மனிதர்களிடம் மட்டுமே பேசி பழகக்கூடியவை, ஒரு மனிதனின் தோற்றம் எப்படி பார்ப்பவர்களைப் பொருத்து மனிதில் எண்ணங்களை உருவாக்கின்றதோ, அதே போல், எழுத்துக்களும் பார்ப்பவர் படிப்பவர்களிடம் எண்ணங்களை உருவாக்க வல்லது, எழுதுபவரிடம் பாலினம், மதம், இனம், பணம், என அனைத்தையும் கடந்து, எழுதபவரிடம் எழுத்தின் மேல் காதல் தோன்றினாலே, நிராகரிப்பில்லா இருதலை காதல் கொள்ளும் வல்லமை பொருந்தியவை எழுத்துக்கள், உலகின் அனைத்திலும் மேலானவை எழுத்துக்கள், மனிதனின் அனைத்து உணர்ச்சிகளிலும் பரிணமிக்கக்கூடிய எழுத்துக்கள் நிச்சயம் உயிர் உள்ளவை, ஆனால், எழுத்துக்களின் உணர்வு எப்படி இருக்கும், அவை என்ன நினைக்கும், அவை எழுதுபவரை தாய், தந்தையாக பாவிக்கிறதா? எவர் மீதும் எதுவும் பாசம் வை