எழுத்தாய் பிறந்து வாழ ஆசை - புலவர் பா.கார்த்திக் ராஜா
எழுத்தாய் பிறந்து வாழ ஆசை
- புலவர் பா.கார்த்திக் ராஜா
நிம்மதியில்லாதது,
நிரந்தரமில்லாதது,
ஓடும் வேகத்தில் பார்வையை கவர்வது,
திரும்பிப் பார்த்தால் கண்ணில் சிறு ஓட்டம் ஓடுவதும்,
முன்னே பார்க்க பல ஓட்டங்கள் தூண்டுவதும்,
வாழ்க்கை மட்டுமல்ல இவ்வெழுத்துக்களும் தான்
எழுத்துக்கள் வாழ்க்கையைப் போன்றவை,
எழுத்துக்கள் உலகில் மற்ற உயர்கள் போல தோன்றி மறைபவை,
மனிதர்களிடம் மட்டுமே பேசி பழகக்கூடியவை,
ஒரு மனிதனின் தோற்றம் எப்படி பார்ப்பவர்களைப் பொருத்து மனிதில் எண்ணங்களை உருவாக்கின்றதோ,
அதே போல், எழுத்துக்களும் பார்ப்பவர் படிப்பவர்களிடம் எண்ணங்களை உருவாக்க வல்லது,
எழுதுபவரிடம் பாலினம், மதம், இனம், பணம், என அனைத்தையும் கடந்து,
எழுதபவரிடம் எழுத்தின் மேல் காதல் தோன்றினாலே,
நிராகரிப்பில்லா இருதலை காதல் கொள்ளும் வல்லமை பொருந்தியவை எழுத்துக்கள்,
உலகின் அனைத்திலும் மேலானவை எழுத்துக்கள்,
மனிதனின் அனைத்து உணர்ச்சிகளிலும் பரிணமிக்கக்கூடிய எழுத்துக்கள் நிச்சயம் உயிர் உள்ளவை,
ஆனால், எழுத்துக்களின் உணர்வு எப்படி இருக்கும், அவை என்ன நினைக்கும், அவை எழுதுபவரை தாய், தந்தையாக பாவிக்கிறதா? எவர் மீதும் எதுவும் பாசம் வைக்கிறதா?
இனரீதியாக, மொழிரீதியாக, மதம் ரீதியாக எழுதப்படும்போது, தனது பெற்றோர்களின் பாதையில் எழுத்துக்களும் இனப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று பெறுகின்றதா?
எழுத்துக்களில் ஏழை, பணக்காரர் வித்யாசம் உள்ளதா?
பெரும் விலை மதிப்புள்ள பேனாவிலும் மைகளிலிலும் இருந்து தோன்றக்கூடிய எழுத்துக்கள் எங்கும் பகட்டு பேசுகின்றதா? பந்தா காமிக்கின்றதா?
ஏழைகளுக்கு கொடை கேட்டு எழுதப்பட்டும் எழுத்துக்களாவது ஏழைகளுக்காக இறக்கம் கொள்கின்றதா?
உலகில் நடப்பவை அனைத்தையும் நிச்சயம் எழுத்தக்கள் வேடிக்கை பார்ப்பதில்லை
பெரும்பாலும் எழுத்துக்கள் விலை போகக்கூடியவை அல்ல
எழுதப்படும் தாள்களே விலை போகக்கூடியவை
கடவுள் என்ற எழுத்தின் மூலம் கடவுளாக மாறும் தன்மையுடைய எழுத்துக்கள்,
மனிதர்கள் பிரார்தனையை கேட்டு அவகளை நிறைவேற்றுகின்றனவா?
கடவுள் என்ற பெயரில் உள்ள எழுத்துக்கள் உலகில் நீதியை காக்க எதுவும் முயற்சி செய்கின்றவா?
எழுத்தாக பிறந்து வாழ ஆசை
ஒரு முறையாவது மதுரை மீனாட்சி யம்மன் கோவிலில் உள்ள தெப்பக்குளம் சிலவலிங்கத்திற்கு அருகே தமிழ் எழுத்தாக பிறந்து வாழ ஆசை
அங்கே இதுவரை குளத்தில் இருக்கும் ஈசன் அருகே ஒரு தமிழ் எழுத்துப்பலகை கூட இல்லை
வெளியூர்காரர்களிடம் அடையாளம் தெரியாதவனாய் தனது தோற்றத்திற்கு கிடைத்த பொதுப்பெயரையே தனது அடையாளமாக இருக்கிறான்
இப்படிக்கு,
புலவர் பா.கார்த்திக் ராஜா