சுமேரிய நாகரீத்தை ஆட்சி செய்த காராள வேளாளர்கள்
சுமேரிய நாகரீகத்தை ஆட்சி செய்த காராள வேளாளர்கள் :
இப்படிக்கு,
புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை
சுமேரிய நாகரீகத்தில் இருந்தே தமிழர் (வேளாளர்) தோன்றினர் என்பதும் பாண்டியன் சுமேரிய நாகரீகத்தில் இருந்தே வந்தான் என்பது பற்றியும் இதற்கு முந்தைய blogகளில் எழுதி இருந்தேன்
சுமேரிய நாகரீகமே தமிழர்களின் குமரி நாடு என்று யூகித்தாலும், அதற்கான ஆதாரங்கள் தேவை, குறிப்பாக சுமேரிய நாகரீகத்தில் தமிழ் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் தேவை, அதற்கான தேடலில் நான் இப்போது பயணித்து வருகிறேன். தற்போது வரை, எனக்கு மிக முக்கியமாக பட்ட ஆதாரங்களை இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளேன்
1) வேள் (பட்டம்) - சுமேரியா
சுமேரியா நாகரீகத்தில் அரசர்கள் தங்கள் பெயருடன் சேர்த்து "Bel" என்ற பட்டத்தையும் சேர்த்துள்ளனர்
சுமேரிய நாகரீகத்தில் Bel என்றால் தலைவன் என்று பொருள்
உலகில் இந்த பட்டத்தின் தொடர்ச்சி வேளாளர்களிடம் மட்டுமே காணப்படுகின்றது
வேளிர் மன்னர்கள் இப்பட்டத்தை பயன்படுத்தினர்
2) சுமேரியாவில், கி (Ki)= பூமி
Anunnaki கடவுள் வழிபாட்டில்,
Ki (கி) = பூமாதேவி
தமிழில், கிழான் = வெள்ளாளர்களின் பட்டம், அதாவது ஒரு கிராமம் அல்லது நிலத்தின் உரிமையாளர் அல்லது தலைவர்
கீழ் = பூமி
கிழங்கு = மண்ணுக்கு அடியில் வளரும் கிழங்குகள்
மேலும், கிழலை = உப்பு மண்
வெள்ளாளர் தங்களை "பூமிபுத்திரர்" என்று அமைத்துள்ளனர், பாண்டியர் மற்றும் சோழர் கால கல்வெட்டுகளில்
ஜடாவர்மன் வீரபாண்டியனும் கூட தன்னை ஒரு கல்வெட்டில் பூமிபுத்திரன் என்று குறித்துள்ளான்
சுமேரிய நாகரீகத்தில் An (வான கடவுள்) மற்றும் Ki (பூமாதேவிக்கும்) பிறந்தவனும் சுமேரிய நாகரீகத்தின் முதல் பேரரசனுமான
Enlil = பூமிபுத்திரன் என்றே அழைக்கப்படுகிறான்
மன்னர் தன்னை பெருமான் (பூமியின் கணவன்) என்றும்
இளவரசர்கள் தங்களை பூமிபுத்திரர் என்று அழைத்துக் கொள்வதே தமிழ் அரச மரபு
இந்த சுமேரிய நாகரீக மரபும் கூட உலகில் பின்னர் தமிழ் வேளாளரிடம் மட்டுமே தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Enlil என்றவன் பேரரசன் ஆன பிறகு, தன்னை பூமியின் கணவனாக அழைத்துக் கொண்டான்
3) சுமேரியர்கள் தங்களை Black Heads என்று குறித்துள்ளனர்
Black Heads = கார் தலை
தமிழில், கார் = கருப்பு, கார் என்றால் மேகம் கிடையாது
தலை என்பதே மேகம்
கார் தலை = கரு மேகம் (மழை தரக்கூடிய கருமேகங்கள்)
உதாரணம், குறுந்தொகை 186
கார்தலை மணந்த முல்லை நிலம் என்று வருவது போல
இங்கு,
கார் = black, தலை = Clouds
கார்தலை = Black Rainy Clouds
மேலும், அகநானூறு 133
கார்தலை = Black Clouds (Rainy Clouds)
வேளாளரில், 2 பிரிவுகள்
வெள்ளாளர் = வெண்மை + ஆளர்
காராளர் = கருமை + ஆளர்
காராளர் = கார் மேகங்களை ஆள்பவர்
காராளர் = சுமேரியர்களை ஆள்பவர் என்று குறிக்கும்
பாண்டியன் மழை மேகங்களை சிறைப் படிக்கிறான், இந்திரன் விடுவிக்க வேண்டுகிறேன், பாண்டியன் மேகத்திற்கு பிணை கேட்கிறான், இந்திரன் மேகங்களுக்கு பிணையாக ஒரு வேளாளனை பாண்டியனிடம் ஒப்படைக்கிறான், இப்படி மேகத்திற்கு பதில் பிணையாக வந்த வேளாளர்கள், கார்காத்த வேளாளர் என்று அழைக்கப்படுகின்றனர்
திருவிளையாடல் புராணம் :
மதுரை சிவன் - மீனாட்சியம்மனின் மகனாக
முருகன் "உக்கிர பாண்டியனாக" பிறக்கிறார்
உக்கிர பாண்டியனுக்கும் இந்திரனுக்கும் போர் வருகின்றது, பாண்டிய நாட்டுக்கு மழை வேண்டி
இந்திரன் தோற்கிறான்
மழை மேகங்களை (கார்தலை or Rainy Clouds)ஐ பாண்டியன் சிறையில் அடைக்கிறான்
இங்கு, கருமையான மழை மேகங்ளுக்கு பெயர் கூட இருக்கும்
எனவே,
கார்காத்த வேளாளர் = சுமேரியர்களை காத்த வேளாளர்
காராளர் = சுமேரியர்களை ஆட்சி செய்த வேளாளர்
இன்றும் துருக்கியில், கார் (துருக்கி மொழி) - கருப்பு என்றே பொருள்
துருக்கி வாழ் குர்து (Kurds) இனமக்களில் கூட
"காராளர்" என்ற உட்பிரிவு உள்ளது
துருக்கி நாட்டில் ஒரு கிராமத்தின் பெயர்
கிராமம் - காராளர் (Karalar),
மாவட்டம் - Besni,
மாநிலம் = அதியமான் (Adiyaman)
அதியமான் என்பது ஒரு வேளிர் மன்னர் பெயர் என்பது ஆச்சரியம்
4) சுமேரியாவில்,
மன்னர்கள் ஒளியர் என்று குறிப்பிடப்படுகிறார்கள்
தமிழில், ஒளியர் (ஒளிர்பவர்கள்) = சோழ சாம்ராஜ்யத்தில் பிற மண்டலங்களை ஆள உரிமை பெற்ற வெள்ளாளர்கள் என்று 14ம் நூற்றாண்டில் பட்டினப்பாலை நூலுக்கு உரை எழுதிய நச்சிணார்ககினியர் கூறுகிறார்