கார்காத்தார், திருநெல்வேலி சைவர் - வேளாளர் கிடையாது
கார்காத்தார், திருநெல்வேலி சைவர் (வெள்ளாளர்) - வேளாளர் கிடையாது, இவர்கள் என்ன வர்ணம்?
இப்படிக்கு,
புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை,
கார்காத்தார்,
மதுரை
வேளாண் மாந்தர், வேளாளர் என்பது மூவேந்தர் நிலத்தில் வைதீக மதத்தில் சூத்திர வர்ணத்தைக் குறிக்கும் சொல்
வேளாளர் = 4ம் வர்ணத்தின் பெயர்
தொல்காப்பியத்தில் குலமக்கள் - 4
அதாவது, Savarna (வர்ணத்தில் அடங்குபவர் - 4), இதில் வேளாண் மாந்தர் என்பது 4ம் வர்ணத்தின் பெயர்
வர்ணத்தில் சேராதவர் - 18,
(நிலமக்கள் - 5, வினைமக்கள் - 9, குடிமக்கள் - 4)
10ம் நூற்றாண்டு பிங்கல நிகண்டு (Glossary)ல் மீண்டும்
சூத்திரர் பெயர் என்பதில் வேளாளர் என்று உள்ளது
காராளர் என்ற வார்த்தை தொல்காப்பியத்தில் இல்லை, இங்கு பூவைசியர், சூத்திரர் இரண்டு வர்ணத்திலும் உள்ளது
காராளர் என்ற வார்த்தை முதன் முதலில் மணிமேகலை நூலில் தான் வருகிறது
மணிமேகலை - புத்த மத நூலாகும்
இது களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட நூல் (கி.பி 3ம் நூற்றாண்டிற்கு பிறகு)
எனவே, மணிமேகலை நூலில் "காராளர்" என்ற மக்களின் நகரமாக கூறப்படும்
சண்பை நகரம் (Champa Nagar), இன்றைய Biharல் உள்ளது
மௌரியப் பேரரசர் அசோகரின் தாய் - இதே சண்பை நகரத்தைச் சேர்ந்த ஆசீவக மத பிராமணரின் மகள் ஆவார்
பீகாரில் இருந்து காராளர் எப்படி தமிழகம் வந்தனர்?
கி.மு 3ம் நூற்றாண்டில்,
மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியர், இறுதி காலத்தில் மகத நாட்டில் (இன்றைய Bihar), 12 வருட பஞ்சம் வர இருப்பதாக கூறப்பட்டதால், தனது மகன் பிந்துசாரனை அரசனாக்கிவிட்டு, மகத நாட்டு மக்களையும் தனது சமண மத குருவான பத்ரபாகு ஆகியோருடன் இன்றைய தென் கர்நாடகா பகுதிக்கு வந்து குடியேறினர்
மௌரியரின் மதம் - பிராதானமாக Jain (சமணம்), ஆசீவகம், பௌத்தம்
பேசிய மொழி - Prakrit, Pali
இதில், சமண மதத்தின் மொழி - Prakrit,
பௌத்த மதத்தின் மொழி - Pali
இதில் இருந்து சரியாக 600 ஆண்டுகள் பிறகு,
இதே தென் கர்நாடகா பகுதியில் இருந்து,
கி.பி 3ம் நூற்றாண்டில்,
சமண மதமும், Prakrit மொழியும் பேசிய Kalabhras (களப்பிரர்) என்ற மக்கள் தமிழகம் நோக்கி படையெடுக்கிறார்கள்
மூவேந்தரை வீழ்த்தினர்
சமண மதமும் Prakrit மொழியும் பேசிய பல்லவர் அரச வம்சம் வட தமிழகம் நோக்கி படையெடுத்தது
சரி, இப்போது ஓரளவு புரிந்து இருக்கும்,
கி.பி 12ம் நூற்றாண்டு திருச்செங்காட்டாங்குடி கார்காத்தார் மடத்துச் செப்பேட்டில்
கார்காத்தார் தங்கள் குலப் பெருமையாக
"மூவேந்தரை வீழ்த்தினோம்" என்று கூறியுள்ளனர்
கி.பி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த
பாண்டியர் கால
"வேள்விக்குடிச் செப்பேட்டில்"
களப்பிரரைக் குறிக்க "களப்பாளர்" என்ற சொல் பயன்பட்டுள்ளது
பல சோழர் கால இலக்கியங்களில், களப்பிரரை "களப்பாளர்" என்றே கூறியுள்ளனர்
கார்காத்தார் தங்கள் 96 கோத்திரங்களில்,
"களப்பாளர்" என்று ஒரு கோத்திரம் உள்ளது,
அச்சுதராயர் என்று ஒரு கோத்திரமும் உள்ளது
5ம் நூற்றாண்டில்,
புத்த மத இலக்கியத்தில்
சோழ நாட்டை ஆண்ட களப்பிர மன்னரின் பெயர்
அச்சுத விக்காந்தகன் என்று கூறப்பட்டுள்ளது
13ம் நூற்றாண்டில், சைவ சிந்தாந்தத்தை எழுதியவர்
மெய்கண்ட தேவர்
இவர் கார்காத்தார்
இவருடைய தந்தைப் பெயர் - அச்சுத களப்பாளர்
இன்று வரை, கார்காத்தாரில் பெரும்பாலோனோர் - சைவ உணவு மரபைச் சேர்ந்தவர் (Vegetarians)
களப்பிரர் என்றால் என்ன?
களப்பிரரைக் குறிக்க களப, களம்ப போன்ற சொற்கள் அவர்கள் சமகாலத்தில் பயன்படுத்தப்பட்டது
அவர்கள் பேசிய மொழி - Prakrit
வடமொழியில்,
களப்பிரரைக் குறிக்கும் சொற்களுக்கு
"கருப்பு மேகங்கள், மழை மேகங்கள்" என்று பொருள்
கார்காத்தார் = மழை மேகங்களை காப்பவர்
காராளர் = மழை மேகங்களை ஆள்பவர்
களப்பிரர் வீழ்ச்சிக்கு பிறகு, புகழ் பெற்ற களப்பிரர்கள்
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
சோழர்களுக்கு பரம்பரை பரம்பரையாக படை தளபதியாக இருந்த பரம்பரையைச் சேர்ந்தவர்
இதில், ஏயர்கோன் கலிக்காம நாயனார்
ஏயர் கோக்குடியில் பிறந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றது
ஏயர் என்றால் "Haihaya" என்ற சொல்லின் தமிழ்ச் சொல்
Haihaya அரச வம்சத்தின் புகழ்பெற்ற மன்னர்
Kartavirya Arjuna
புகழ்பெற்ற பரசுராமர் போரில் எதிர்தரப்பினர்
இதில், "கலிக்காமன்" என்ற சொல்லுக்கு "கலி வம்சத்தவன்" என்று பொருள் உண்டு
கலி என்பது களப்பிரரைக் குறிக்கும் சொல்
செப்பேடுகளில், கலிவம்சம், கலியரசர் என்று களப்பிரர் குறிக்கப்படுகின்றனர்
எனவே, Haihaya வம்சதைச் சேர்ந்தவர், களப்பிரர் வம்சமாகவும் கூறப்படுவது எப்படி?
கி.பி 11ம் நூற்றாண்டில், எழுதப்பட்ட சதக நூல்
"கார் மண்டல சதகம்"
கார் மண்டலம் = இன்றைய தென் கர்நாடகா
இதில்,
கார் மண்டலத்தை ஆட்சி செய்த
18 காராளர் அரச வம்சங்களாக,
Moriyas (மௌரியர் / Mauryas / மௌரியர்),
Haihayas,
Pallavas,
Kadambas,
Satavahanas,
Banas போன்றோர் கூறப்பட்டுள்ளனர்
இதில், Kalachuri என்பவரும் அதே Haihaya பரம்பரையைச் சேர்ந்தவர்
எனவே, Haihayas அரச வம்சத்தினரே இங்கு களப்பிரராக வந்துள்ளனர்
Haihayas மட்டுமே வந்தாரா?
புகழ்பெற்ற "பாண்டிய நாட்டில் வாணாதிராயர்" என்ற புத்தகத்தில்,
பிற்காலப் பாண்டியர் காலத்தில், வாணாதிராயர் என்பது அரியாசனத்தின் பெயராக உள்ளது
பிற்கால பாண்டியர் களப்பிரர் வம்சத்தவர் என்று நான் பதிவு செய்துள்ளேன்
எனவே, Banas என்ற அரச வம்சமும் களப்பிரராக வந்துள்ளது
கி.பி 10ம் நூற்றாண்டு பிங்கல நிகண்டில் (Glossary)ல்
ஐயனாரை - சாதவாகனன் (Satavahanas) என்று கூறப்பட்டுள்ளது
திருநெல்வேலி சைவர் (வெள்ளாளர்) குலதெவ்யமாக வழிபடுவது
சாஸ்தா / சாத்தன் / அய்யனார்
இங்கு, சாஸ்தா - சைவக் கடவுள் (பலி கிடையாது)
எனவே, திருநெல்வேலி சைவ (வெள்ளாளர்) களப்பிரர் காலத்தில் வந்த Satavahana பேரரசு பரம்பரையினர்
இவர் வர்ணம் என்ன?
கி.பி 224ல் Satavahana பேரரசு வீழ்ச்சியயடைந்தது
எனவே, வீழ்ந்த காராளர் பேரரசுகள், புது நிலம் தேடி தமிழகத்தின் மீது களப்பிரராக படையெடுத்துள்ளனர்
Jain மதம் - வைதீக மதத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட மதம்
அசோகர் - புத்த மதத்தைத் தழுவினார்
அவர் காலத்தில் இந்தியா முழுவதும் வேள்விக்கு தடை விதிக்கப்பட்டது, பிராமணருக்கு எதிராக Maurya பேரரசு செயல்பட்டது
களப்பிரரும் பிராமணருக்கு எதிராக செயல்பட்டவர்
Satavahana பேரரசு கி.மு 228ல் தொடங்கப்பட்டது
மௌரியப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து
திருநெல்வேலி சைவ (வெள்ளாளர்) - புத்த மதம் / ஆசீவக மத பிராமணர் வர்ணத்தைச் சேர்ந்தவர்
களப்பிரர் வீழ்ச்சிக்கு பிறகு,
ஏயர்கோன் கலிக்காம நாயனார் - 4ம் வர்ணமான வேளாளர் வர்ணத்துக்கு வருகின்றனர்
எனவே, களப்பிரர் குழுவில் ஏயர் (Haihaya) வம்சத்தினர், களப்பிரர் வீழ்ச்சிக்கு பிறகு,
4ம் வர்ணத்திற்கு வீழ்ந்துள்ளனர்
பிற்காலப் பாண்டியர் வீழ்ச்சிக்கு பிறகு,
மொத்தமாக கார்காத்தார் மற்றும் திருநெல்வேலி சைவ (வெள்ளாளர்)
4ம் வர்ணத்திற்கு வீழ்ந்து வேளாளர் வர்ணத்திற்கு வீழ்ந்துள்ளனர்
காராளர் என்பவர் வேளாளரே கிடையாது
வீழ்ச்சியடைந்த பின், 4ம் வர்ணமாக மாறியுள்ளனர்
இது இவர்கள் தனியாக Vegetarian மரபாக இருப்பதில் இருந்தே நன்கு புலப்படும்
பல்லவர் - பிரம்ம சத்ரியர்?
பிரம்ம-சத்ரியர் என்ற வர்ணமே இந்து மதத்தில் கிடையாது
இது Jain மத புராணத்தில் உதித்த வர்ணம்
இந்து மதத்தில், பரசுராமர் சத்ரியர்களை முழுவதுமாக அழித்து விட்டதாகவும்
பின், சத்ரிய பெண்களுக்கும் பிராமண ஆண்களுக்கும் பிறந்தவர் புது சத்ரியராக அறிவித்தார்
Jain மதத்தில் Kartavirya Arjunaவிற்கு ஒரு மகன் இருந்தான், அவன் பெயர் Shubanana, இவன் பரசுராமரைக் கொன்றுவிட்டதாகவும்
அவன் கைப்பற்றிய நாட்டு பிராமணரைக் கொன்று பிராமண பெண்களுக்கும் சத்ரிய ஆண்களுக்கும் பிறந்தவரே "பிரம்ம-சத்ரியர்" என்ற வர்ணம்
இது பற்றி, 15ம் நூற்றாண்டில், ஆனந்த பட்டர் என்பவர் எழுதிய "Vallala Charitra" என்ற நூலில்
11ம் நூற்றாண்டில் இன்றைய Bengal பகுதியை ஆட்சி செய்த Seuna வம்ச Vallalan (வல்லாளன்) என்ற மன்னரைப் பற்றிய குறிப்பில்
Seuna மன்னர் பூரீவ்கம் - Karnataka என்றும்
இவர்கள் பிரம்ம-சத்ரியர் என்றும்
கடம்பரும், பல்லவரும் இதே பிரம்ம-சத்ரியர் வர்ணம் என்றும் கூறியுள்ளார்
இவர்களை வீழ்த்தி சேதுபதி பின்னர் கள்ளரை இங்கு அரசனாக்கினார்
இந்த பல்லவராயரில், சிவந்தெழுந்த பல்லவராயன் 1580ல் வாழ்ந்தவர், அவனுக்கு எழுதப்பட்ட சிவந்தெழுந்த பல்லவராயன் உலா நூலில், தங்களை "காராளர்" என்றும் பல்லவர் வம்சம் என்றும் மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் குறித்துள்ளனர்
மேலும், பல்லவர்கள் - காராளர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன
சரி,
கார்காத்தார் மற்றும் திருநெல்வேலி சைவ (வெள்ளாளர்) வேளாளர் வர்ணத்திற்கு வீழும் முன் என்ன வர்ணத்தில் இருந்தனர்?
Jain பேரரசுகளில் வர்ண அடுக்கு,
1) Sat-Kshatriyas - சற்-சத்ரியர்
இதுவே முதல் மற்றும் உயர்ந்த வர்ணம்
இதில், அரசர், இளவரசர் குடும்பங்கள் வருவர்
இவர்கள் பெரும்பாலும் Vegetarians
2) Brahmins
3) Kshatriya - இது அரசரின் சாதி கிடையாது, படைகளாக மட்டும் செய்ல்படுபவர், இவர்கள் மது அருந்துவர், அசைவம்
களப்பிரர் அரச வம்சம் - கார்காத்தார், சைவர் (வெள்ளாளர்)
அவர்களோடு இங்க வந்த சத்ரிய படை யார்?
14ம் நூற்றாண்டிற்கு பிறகே, கார்காத்தாரும் திருநெல்வேலி சைவரும் (வெள்ளாளரும்) 4ம் வர்ணமான வேளாளர் வர்ணத்திற்கு வீழ்ந்தனர்
பூர்வீகத்தில்,
கார்காத்தார் - சற்-சத்ரியர், பிரம்ம-சத்ரியர் வர்ணங்கள் (பல்லவர்)
திருநெல்வேலி சைவர் (வெள்ளாளர்) :
சற்-சத்ரியர், பௌத்த / ஆசீவக மத பிராமணர், பிரம்ம-சத்ரியர் (பல்லவர்)
இதன் தொடர்ச்சியாகவே,
இலங்கையில், சைவர் (வெள்ளாளர்) சமூக அடுக்கில் முதல் வர்ணமாக இருந்தனர்
கார்காத்தாரும் திருநெல்வேலி சைவரும் (வெள்ளாளர்) சமூக அடுக்கில் பல அரச, பிராமண வர்ணங்களை விட இன்று வரை வீழ்ச்சிக்கு பிறகும் உயர்ந்த மக்களாக கூறப்படுவதும் இவர்கள் பூர்வீக வர்ணத்தால் தான்
மௌரிய பேரரசு வீழ்ச்சிக்கு பிறகு, அதில் இருந்து பிரிந்த காராளர்கள் தென் இந்தியாவில் அடுத்த 1000 வருடங்கள் ஆட்சி செய்துள்னர்
Magadha நாட்டு Vratayas பற்றியும்
அதே Vratya நாட்டு கங்கைக் கரையில் இருந்து படையெடுத்த முருகன் பற்றியும் அடுத்து பதிவு செய்கிறேன்
நன்றி